பெருமாள் ஸர்வ ஶக்தன் அவனுக்கு ரொம்ப சூடாக இருந்தாலும் அமுது செய்வான். அவனுக்கு நாம் நிவேதனம்தான் செய்கிறோம். மேலும் பெருமாளுக்கு ரொம்ப சூடாக இல்லாமல் சாதாரணமாக இருக்கவேண்டும். அவன் அமுதுசெய்கிறான் என்ற பாவத்தோடுதானே நாம் நிவேதனம் செய்கிறோம் ஆகையால் சூடு இருக்கவேண்டும். மிகவும் ஆறிப்போய் சாப்பிடக்கூடாது என்றும் கொதிக்கக் கொதிக்க சாப்பிடக்கூடாது என்றும் ஆரோக்யரீதியாக இருக்கிறது, ஶாஸ்த்ரப்படி தளிகை பண்ணி மூன்று மணி நேரத்திற்குப் பிறகு (யாதா யாமம்) சாப்பிடக்கூடாது என்றும் இருக்கிறது.

