ப்ரஹ்மயஜ்ஞம் என்றால் என்ன? க்ருஹஸ்தர்களும் சமிதா தானம் செய்ய வேண்டுமா? க்ருஹஸ்தர்கள் சந்தியா வந்தனம் , ப்ரஹ்மயஜ்ஞம், திருவாராதனம் தவிர கட்டாயம் செய்ய வேண்டிய கர்மா/ஹோமம்/யஜ்ஞம் என்னென்ன?

ப்ரஹ்மயஜ்ஞம் என்பது பஞ்சமஹா யஜ்ஞங்களில் ஒன்று. அதில் ப்ரஹ்மயஜ்ஞம் என்பது நாம் கற்றுக்கொண்ட வேதபாடங்களை மறவாமல் இருக்க நித்யபடி எவ்வளவு முடியுமோ அதை அவசியம் சொல்லவேண்டும். இது ஒரு நித்யகர்மா. இதை விடக்கூடாது,
கடைசி பக்ஷம் புருஷஸூக்தம் கற்றுக்கொண்டு அதையாவது சொல்லவேண்டும்.வேதாத்யயனம் செய்தவர்கள் நித்யபடி ஒரு ப்ரஶ்னம் ப்ரஹ்மயஜ்ஞம் சொல்வர்கள். இதை உபநயனமானவர்கள் அத்யயனம் ஆரம்பித்தவுடனே பண்ணுவார்கள். மேலும் இந்த நித்யகர்மா பாரியாள் உயிரோடு இருக்கும்வரைதான் பண்ணமுடியும். இது யஜ்ஞமானபடியினால் அவர் பரமபதித்தபின் இக்கர்மா விட்டுப்போகும்.
க்ருஹஸ்தர்கள் செய்யவேண்டாம். சமிதா தானம் – சமித்+ஆதானம் -> சமித்தைப் பகவானுக்கு அக்னியில் ஸமர்ப்பிப்பது. இது ப்ரஹ்மச்சாரிகளுக்குக் கர்தவ்யமாகும்.
க்ருஹஸ்தர்களுக்கு சந்தியாவந்தனம், ப்ரஹ்மயஜ்ஞம், திருவாராதனத்துடன் கட்டாயம் செய்யவேண்டிய நித்யபடிகர்மாகள்- வைஶ்வதேவம், தேவரிஷி, காண்டரிஷி, பித்ரு தர்ப்பணம், ஆதார சக்த்யாதி தர்ப்பணங்கள். ஔபாஸனமும் நித்யபடி செய்யவேண்டிய கர்மா ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top