பெருமாள் எல்லாரையும் படைக்கின்றபடியால், அவனுக்கு அப்பா, அம்மா இல்லை.ஸ்ரீ ராம க்ருஷ்ணாதி அவதாரங்களில் பெருமாளுக்கு அப்பா, அம்மா இருக்கிறார்கள்.
அவர் தனியாக இல்லை, எப்போதும் நம்முடனே இருக்கிறார், அந்தர்யாமியாக இருக்கிறார் நம் கண்களுக்குத் தெரியாமலே நம்முடனே இருப்பதினால் தனியாக அகத்திற்கு அழைத்து வரவேண்டுமென்றில்லை என்று குழந்தைக்கேற்றவாறு சொல்லவேண்டும்.
குறிப்புகள்:
மேலும், பெருமாளுக்கு நாம் பெற்றோராக இருக்க ஆசைப்பட்டால், யசோதா போல் அந்த பாவத்துடன் இருக்கலாம். அக்குழந்தையின் பெற்றோர்கள் க்ருஷ்ணரை (பொம்மை) அகத்திற்கு அழைத்துவந்து அவருக்கு யசோதாபோல் பாவத்துடனும் அல்லது ஒரு சகோதரத்துவத்துடனும் அக்குழந்தையின் பாவத்திற்கு ஏற்றார்போல் எம்பெருமான் இருப்பான் / விளையாடுவான் என்று சொல்லலாம். எம்பெருமான் எல்லாவிதத்திலும் இருப்பான் என்றும், அவன் எல்லாருக்கும் அவர்கள் எண்ணம்போல் பந்துவாகவும் ஆவான் என்று சொல்லிப் புரியவைக்கலாம்.