நம் ஆசார்யர்களுடைய வ்யாக்யான க்ரந்தங்களிலே ஆழ்வார்கள் என்று குறிப்பிட்டால் ஸ்ரீ சக்ரத்தாழ்வாரும், ஸ்ரீ பாஞ்சசன்யமான சங்கத்தாழ்வாரும் என்று அர்த்தம்.
அனுமனுக்குத் திருவடி என்றும், கருத்மானுக்குப் பெரியதிருவடி என்று ஸ்ரீகோசங்களிலே ஆசார்யர்களுடைய வ்யவகாரம். அதை வைத்துதான் ஸ்ரீ உ வே பாலாஜி ஸ்வாமி ஸாதித்திருக்கிறார்.
நாம் கருடாழ்வார் என்று சொல்வதில் விரோதமில்லை, சொல்லலாம். ஆனால் பெரியதிருவடி என்று ஆசார்யர்களுடைய வ்யவகாரம் என்பது ஸ்ரீகோசங்களிலே தெரிகிறது.