அந்தந்தப் பருவத்திலே ஏற்படக்கூடிய காமக் க்ரோதங்களை ஜெயிக்க வைராக்ய பஞ்சகத்தைப் பாராயணம் செய்யலாம் என்று தோன்றுகிறது. வைராக்ய பஞ்சகம் என்பது ஒருவனுக்கு ஐஶ்வர்யம் க்யாதி இவற்றின் மேல் இருக்கக்கூடிய மோகத்தைப் போக்கும். ஸ்வாமி தேஶிகன் ஸ்தோத்ரம் எப்படி இதையெல்லாம் த்ருணமாக மதித்தார் என்று இந்த ஸ்தோத்ரம் சொல்லுகிறது அதனால் இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்தோமேயானால் நமக்கும் வைராக்யம் ஏற்படும்.