ஸ்ரீமத் இராமாயணத்திலேயே அதற்கு சமாதானம் இருக்கின்றது. 14 வருடங்கள் ஆனால் ஒரு தலைமுறை ஆகிவிடும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. பெருமாள் ஸ்ரீ ராமருடன் பழகிய ஜனங்கள் வேறு ஒருவர் வருவதை ஒற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் 14 வருடங்கள் ஆயிற்றேயானால் அந்தத் தலைமுறைக்கு அடுத்த தலைமுறை வர ஆரம்பித்து விடும். அதில் எல்லோரும் பரதனுடன் பழகியவர்களாகதான் இருப்பார்கள். அவர்கள் இராமன் வந்தாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். 14 வருடங்கள் பரதன் ஆண்டு விட்டால் தொடர்ந்து பரதனே இருக்க முடியும் என்கின்ற ஒரு கணக்கில் சொல்கிறார். வேறு ஒரு காரணமும் இல்லை. 12, 20 என்பதற்கெல்லாம் அதில் ஒன்றும் சொல்லவில்லை.