1. நதிகளில் ஸ்நானாதி ஸங்கல்பம் தத்தாங்க தர்ப்பணம் கிழக்கு முகமாக மட்டுமே செய்ய வேண்டுமா அல்லது நதி ப்ரவாக திசையில் செய்யலாமா? (நம் பக்கம் பொதுவாக மேற்கிலிருந்து வருகிறது) 2. கோயிலுக்கு வெளியே பின்புறம் அல்லது முன்புறம் உள்ள புஷ்கரிணியில் அனுஷ்டானம் செய்யும் போது எந்தத் திசையில் செய்ய வேண்டும்?. பெருமாள் இருக்கும் திக்கை நோக்கியா? 3. தற்போதைய நிலையில் மாத்யாஹ்நிகம் காலை வேளையில் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படிச் செய்தால் மீண்டும் மாத்யாஹ்நிக வேளையில் செய்ய வேண்டுமா? 4 அமாவாசை மற்றும் இதர தர்ப்பண நாட்களில் கீரை வகைகள், பூசனி, பரங்கி சேர்த்துக் கொள்ளலாமா அல்லது ஶ்ரார்த்தங்களுக்கு உகந்தவைகளை மட்டுமே செய்ய வேண்டுமா?

நதிகளில் சங்கல்பம், ஸ்நானாங்க தர்ப்பணம் இவையெல்லாம் கிழக்குப் பார்த்துதான் பண்ணவேண்டும். நதி ப்ரவாகம் பார்த்து பண்ணவேண்டாம். ஸ்நானம் மட்டும்தான் ப்ரவாகம் பார்த்து பண்ணனும்.
கோயிலில் பெருமாள் இருக்கும் திசைப் பார்த்து அனுஷ்டானம் பண்ணலாம். அதில் அசௌகர்யம் இருந்தால் கிழக்கு, மேற்கு என்று அந்தந்த அனுஷ்டான சமயத்திற்கு ஏற்றவாரு ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டுள்ள திக்கை நோக்கிப் பண்ணலாம்.
மாத்யாஹ்நிகம் காலை செய்துவிட்டால் மறுபடியும் மத்தியானம் செய்யவேண்டாம்.
தர்ப்பண நாட்களில் பூசனி, பரங்கி பண்ணும் வழக்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top