ஆண்கள் எத்தனை காயத்ரி ஜபிக்கிறார்களோ அத்தனை அஷ்டாக்ஷரஜபமும் பண்ணவேண்டும் என்று காலக்ஷேபத்தில் அடியேன் தெரிந்துகொண்டேன். 1. அந்த அஷ்டாக்ஷரஜபத்தை அவர்கள் காயத்ரீஜபத்தைத் தொடர்ந்தே பண்ணவேணுமா அல்லது ஸந்த்யாவந்தனம் பண்ணிவிட்டு பண்ணவேண்டுமா? 2. காயத்ரீ ஜபத்தைத் தொடர்ந்தே பண்ணவேண்டும் என்றால் த்வயஜபமும் சரமஸ்லோகமும் சேர்த்தே பண்ணவேண்டுமா? அல்லது தனியாகவா? 3. ப்ராதஸ்ஸந்த்யையில் மட்டும் அஷ்டாக்ஷரஜபமா மூன்றுவேளையுமா? 4. சரமஶ்லோகம் ஒருதரம் சொன்னால் போதுமா அல்லது அஷ்டாக்ஷரம் ஜபித்த எண்ணிக்கை சொல்லணுமா?

இதில் ஸம்ப்ரதாய பேதம் உண்டு, அதனால் அவரவர் ஆசார்யர்களையோ அகத்து வாத்யார்களையோ கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.
தனியாக என்று நினைக்கிறேன். இதிலும் ஸம்ப்ரதாய பேதம் உண்டு, ஏனென்றால் ஒவ்வொரு ஸம்ப்ரதாயத்திலும் ஒவ்வொரு மாதிரி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆகையால் ஆசார்யர்களையோ, மஹான்களையோ கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.
அஷ்டாக்ஷர ஜபம் மூன்று வேளையும் உண்டு.
சரமஶ்லோகம், அஷ்டாக்ஷரம் ஜபித்த எண்ணிக்கை என்று கிடையாது ஆனால் குறைந்தது 10 தடவையாவது சொல்லவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top