கோபிகைகள் காத்யாயனி விரதமிருந்தார்கள். அங்கு அவர்களுடைய வழக்கம் அப்படியிருந்தது.வேண்டிய வரனைப் பெறுவதற்கு அவர்கள் அதை உபாயகாக வைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த ரீதியில் அவ்வாறு செய்தார்கள்.
ஆண்டாள் காத்யாயனி விரதம் இருக்கவில்லை. காத்யாயனி விரதம் கோபிகைகள் செய்தார்கள் என்பதை பாவனா ப்ரகர்ஷனத்தில் ஏற்கொண்டு எம்பெருமானைக் குறித்து “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று சொல்லிதான் விரதமிருதாள்.
ஆண்டாளுக்கு உபாயமும் உபேயமும் எம்பெருமான்தான். அவள் கோபிகைகளை அனுகரித்து வேறு தேவதாந்தரத்தை அல்லாமல் எம்பெருமானைக் குறித்துதான் விரதமிருந்தாள். கோபிகைகள் அன்று அவர்கள் குல வழக்கப்படிச் செய்தார்கள் அவ்வளவே.