ஶ்ரீதேவி என்பவள் மஹாலக்ஷ்மீ, பிராட்டி. அந்த ஶ்ரீயுடன் கூடிய நாராயணன்தான் பரம்பொருள். அதனால் அவள் பரமாத்மா என்ற கோஷ்டியில் சேர்ந்தவள்.
பூ, நீளா தேவி என்பவர்கள் நித்யசூரிகள். எம்பெருமானின் திவ்ய மஹிஷீகள். அவர்கள் ஜீவாத்மாகள்தான். ஆனால் நமக்கெல்லாம் சேவ்யாள். எப்படி அனந்த கருட விஷ்வக்ஸேநர்களோ அவர்களை போல் பூதேவி, நீளா தேவிமார்களை நாம் சேவிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். பிராட்டியின் சம்பந்தம் இவர்களுக்கு ரொம்ப உண்டு. அவர்களுக்கு எப்படி ஶ்ரீதேவியின் சம்பந்தம் என்பதை ஸ்தோத்ரங்களில் ஆசார்யபுருஷர்கள் பாடியிருக்கிறார்கள்.
கோதாதேவி என்பவள், பூமாதேவியின் அம்சம்தான். அவள் ஆழ்வார்கள் கோஷ்டியில் இருப்பதால் ஆசார்யகோஷ்டியிலும் சேர்கிறாள். நமக்கு ஆசார்யர் ஸ்தானத்திலும் இருக்கிறார். நம்மாழ்வார்க்குள் அனைத்து ஆழ்வார்களும் அடக்கம். ஆகையால் ஆசார்ய கோஷ்டியிலும் அவள் இருக்கிறாள். எம்பெருமானின் திவ்யமஹிஷியாகவும் இருக்கிறாள். ஆகையால் அவர்களை நாம் மிகவும் ஶ்ரத்தையாக வழிபடவேண்டும்.