ஶ்ரீமத் இராமாயண பாராயணத்தை பகவத் ப்ரீத்யர்த்தமாக, ஏதாவது பலனை உத்தேசித்து ப்ரார்த்திப்பதாகயிருந்தால் சாப்பிடாமல் பண்ணவேண்டும். இல்லையென்றால் சாப்பிட்டபின் ஸ்வாத்யாய காலத்திலும் பண்ணலாம்.
ஸப்தாகம், நவாகமாகதான் பண்ணவேண்டுமென்ற அவசியமில்லை. நித்யம் ஒரு ஸர்கமென்றும் பாராயணம் பண்ணலாம்.
ஸ்த்ரீகளின் ரஜஸ்வலை காலத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அவர்களின் ரஜஸ்வலை காலத்தில் அவர்கள் இருக்கும் அறையை தவிர்த்து வேறு அறையில் சேவிக்கலாம்.
பொதுவாக சிலர் தஶரதனின் நிர்யாணம் ஆகி அவரின் ஸம்ஸ்காரம் வரை நடக்கும் கட்டத்தில் நிறுத்தமாட்டார்கள். இருந்தாலும் தினமும் 5 ஸர்க பாராயணம் என்று ஒன்று உண்டு அதில் அவ்வாறு நிறுத்தும்படிதான் வரும். ஆகையால் துக்க கட்டத்தில் நிறுத்துவதால் ஒரு பாதகமுமில்லை.