கோஷ்டிகளில் ஆண்கள் முன்னும், பெண்கள் பின்னும் அமர்வதற்கான காரணம் என்ன?

திருக்கோயில்களில் சேவிக்கும் திவ்ய ப்ரபந்த/ஸ்தோத்ரபாட கோஷ்டி என்பது ஒரு உத்சவத்திற்கு அங்கமாகவோ அல்லது திருநக்ஷத்திரத்திற்கு அங்கமாகவோ சேவிக்கும் வழக்கமாக இருக்கிறது. ப்ராசீனமாகவே திவ்யதேச திருக்கோயில்களில் புருஷர்கள் மட்டும்தான் சேவிப்பார்கள். இப்போது ஆதுனிக காலத்தில் இப்போது ஏற்படும் புதிய கோயில்களில் ஸ்த்ரீகளும் சேர்ந்து சேவிக்கிறார்கள். ப்ராசீன காலம் முதலே புருஷர்கள் மட்டுமே சேவிக்கும் வழக்கம் உள்ளதால், இன்று உருவாகிய சில கோயில்களில் ஸ்த்ரீகளும் சேர்ந்து சேவித்தாலும் அவர்கள் பின் வரிசையில் மட்டுமே அமர்ந்து சேவிக்கிறார்கள். முக்கிய குறிப்புகள்: கோஷ்டியில் சேர்ந்து ப்ரபந்தம்/ஸ்தோத்ரம் சேவித்தால்தான் உத்க்ருஷ்டம் என்பதில்லை. குறிப்பாக ஸ்த்ரீகளுக்குத் திருக்கோயில் கோஷ்டியில் சேவித்தால்தான் உயர்ந்தது என்றில்லை, அவரவர் க்ருஹத்திலேயே இருக்கும் பெருமாளுக்கு ஆழ்வார் ஆசார்யன் திருநக்ஷத்திரத்தன்று அந்தந்த ப்ரபந்தம்/ஸ்தோத்ரபாடங்கள் சேவிப்பதும் அதே பலனளிக்கும். மேலும் திருக்கோயில்களில் சேவிப்பதென்பது ஒரு கைங்கர்ய ரூபமாகவே இருக்கவேண்டும். யாருக்கு அதிகாரம் என்றோ ஏன் எல்லோருக்கும் உரிமையில்லை என்ற எண்ணத்துடன் இருப்பதோ நம் ஶ்ரீவைஷ்ணவ ஸ்வரூபத்திற்கு உகந்ததன்று. ஸேவாகாலத்தில் கலந்துகொள்வதென்பது அனுஜ்ஞா கைங்கர்யம் அகத்துப் பெருமாளுக்குச் சேவித்தாலும் பலனில் பேதமில்லை. ஸ்த்ரீகள் நம் ஸ்வரூபம் உணர்ந்து ப்ராசீன வழக்கத்தைப் பின்பற்றுவது சாலச்சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top