புத்திரன் இல்லாத நிலையில் தௌஹித்ரன் கைங்கர்யங்கள், மற்றும் ஶ்ராத்தாதிகள் பண்ணுவதென்பது அவசியம் அவன் பண்ணவேண்டிய கைங்கர்யம். ஒருகால் அவனுக்கு உபநயன ஸமஸ்காரம் ஆகவில்லையென்றாலோ, சிறு வயதென்றாலோ அந்தச் சமயத்தில் அவனிடமிருந்து கைப்புல் வாங்கி மற்றவர்கள் பண்ணலாம். அவனுக்கு உரியகாலத்தில் உபநயனம் ஆனவுடன் அவன் அவர்களுக்கு ஶ்ராத்தாதி கைங்கர்யங்களைத் தொடரலாம்.

