நெடுநாட்களுக்கு முன்பு ஒரு தெலுங்கு புத்தகத்தில்,ஸ்ரீவைஷ்ணவக் கோவில்களில் பெருமாள் தீர்த்தம் மூன்று முறை சாதிக்கப்படும் என்றும், அது முறையே: முதலாவது காய சுத்தி, இரண்டாவது தர்ம சாதகம் மற்றும் மூன்றாவது மோக்ஷ பிரதம் ஆகியவற்றைக் குறிக்கிறது என்று படித்தேன். இதனை விவரிக்கும் ஸ்லோகம் ஏதேனும் உள்ளதா? நமக்கு தீர்த்தம் சாதிக்கும் போது சொல்லப்படும் மந்திரம்/ஸ்லோகம் எது, மற்றும் நாம் தீர்த்தத்தைப் பெற்றுப் பருகும் போது எந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்?

மூன்று முறை சாதிக்கப்படும் தீர்த்தத்திற்கு காய சுத்தி, தர்ம சாதகம் மற்றும் மோக்ஷ பிரதம் என்று ஆகம ஶ்லோகம் இருக்கிறது (ப்ரமாண ஶ்லோகம் பிறகு தெரிவிக்கிறோம்). தீர்த்தம் ஸ்வீகரிக்கும் போது சொல்லும் ஶ்லோகம் என்று இருக்கலாம் ஆனால் நம் ஸம்ப்ரதாய பெரியவர்கள் சொன்னதாகத் தெரியவில்லை.ஆகையால் நம் ஸம்ப்ரதாய வழக்கத்தில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top