ப்ரபத்தியை உபாயமாகக் கொண்டால் பெருமாள் நமக்கு மோக்ஷம் கொடுப்பார் என்பது ஆசார்யர்கள் நமக்குக் காட்டிக்கொடுத்த வழி. அப்படியிருக்கும் போது எம்பெருமான் ப்ரபத்தி செய்துக்கொள்ள வேண்டாம் என்றும் மோக்ஷம் அளிக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார் என்று அவர்கள் சொல்வது அவர்களுக்குத் தோன்றிய ஒன்றாகத்தான் தெரிகிறது. ஏனென்றால் எம்பெருமான் ஆசார்யர்கள் காட்டிய வழிக்கு விருத்தமாக (எதிராக) ஒன்று சொல்வார் என்பது நிச்சயமாகக் கிடையாது. ஆகையால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தாங்கள் கவலைப்பட வேண்டாம் என்றே தோன்றுகிறது. மேலும், எம்பெருமான் அவரிடம் பேசுவார் என்பதையும் அறவே இல்லை என்றும், ஆமாம் என்றும் மற்றவர்கள் கூறிவிட முடியாது ஆகையால் அதைப்பற்றியும் தாங்கள் யோசிக்கவேண்டாம் என்றே தோன்றுகிறது. முந்தைய சுதர்சன கேள்விகளும் பதில்களும்

