பெருமாளைப் பற்றி புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், நமக்குத் தெரிந்த யாரோ ஒருவரைப் போல் இருப்பார் என்று தானே சொல்ல வேண்டும். அப்படி லோகத்தில் இருக்கும் புருஷர்கள், ஸ்த்ரீகள், இவர்களை காண்பித்து இவர்களைப்போல் இருப்பாரா என்றால், இவர்களைப் போலே இருக்க மாட்டார். ஆணும் இல்லாமல் பெண்ணுமில்லாமல் இருக்கும் வஸ்துக்களைக் காண்பித்து கேட்டால், அப்படியும் இருக்க மாட்டார் என்று கூறுகிறார்.
அவர் இந்த ஜாதியைச் சேர்ந்தவர் இல்லை என கூறுகிறார். பெருமாள் விஜாதியன், விலக்ஷணன் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதனுடைய அர்த்தம்.