நவராத்ரியின் தாத்பர்யம் என்ன அடியேன். நம் சம்ப்ரதாய திருக்கோயில்களில் அம்பு போடுதல் என்ற உத்ஸவம் நடக்கின்றது இவ்வுத்ஸவம் இராவண வதத்தைக்குறிக்கின்றதா? மேலும், நவராத்ரி சமயம் குறிப்பாக ஸ்த்ரீகள் பாராயணம் செய்ய ஏதேனும் விசேஷமான ஸ்தோத்ரமோ/ ப்ரபந்தமோ இருக்கின்றதா அடியேன்.

நவராத்திரியின் தாத்பர்யங்கள்:
மங்கள தேவதையான லக்ஷ்மி தேவியின் வழிபாடு.
ஹயக்ரீவ பகவானுடைய ஆராதனம்.
ஸ்ரீராமனுடைய விஜயத்தைக் கொண்டாடுவது .
நவ விதமான பக்தி இப்படி விளங்குகின்றது.
ஸ்த்ரீகள் நவராத்திரியின் போது லக்ஷ்மி ஸ்தோத்திரங்கள் – சது꞉ஶ்லோகீ, ஸ்ரீ ஸ்தவம், ஸ்ரீ குணரத்ன கோசம், ஸ்வாமி தேசிகன் இயற்றிய ஸ்ரீஸ்துதி , பூஸ்துதி , கோதாஸ்துதி , பாதுகாசஹஸ்ரம் இவை அனைத்துமே பாராயணம் பண்ணலாம். அதே போல் ராமாயணம் வாசிக்கணும் என்று ஸ்த்ரீகள் ஆசைப்பட்டால் மஹாவீர வைபவம் பாராயணம் பண்ணலாம். ஒன்பது நாளும் பாராயணம் செய்தால் பூர்த்தியாக ராமாயணம் சேவித்ததற்கு ஈடாகும்.
எம்பெருமான் ராவண சம்ஹாரத்திற்குப்பின் எப்படி விஜயராகவனாக விளங்கினான் என்பதைக் காண்பிப்பதற்காக அம்பு போடும் உற்சவம் விஜயதசமி அன்று கோவில்களில் நடைபெறுகிறது.
மேலும், விஜயதசமி அன்று அம்பு போடுவது என்பது அரசர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கம். அவர்கள் ஊர் எல்லையில் இருக்கும் எத்தனை வண்ணி மரங்களைச் சாய்க்கிறார்க்ளோ அவ்வளவு வருடங்கள் அவர்கள் ஆண்டிருப்பதாக கணக்கு. அந்த ரீதியில் எம்பெருமான் ராஜாதிராஜன் என்கின்றபடியினால் குதிரை வாகனத்தில் அமர்ந்து கொண்டு ஊருக்கு ராஜா என்பதைக் காண்பிப்பதற்காக வன்னி மரம் அறுக்கிறார் என்பதாக அந்த உற்சவம்.
விரிவான காணொளிக்குக் கீழே உள்ள linkஐ click செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top