“கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று நம்மாழ்வார் ஸ்பஷ்டமாக “ராமர்” என்ற திருநாமத்தை கூறி பாடியுள்ளார்.
ராமன் என்ற பெயருக்கு தமிழில் மனத்துக்கு இனிமையானவன் என்று அர்த்தம். ரமயதி -எல்லாருக்கும் இனிமையாக இருக்கக்கூடியவன். இதை தூய தமிழில் மனத்துக்கினியான் என்பர். அதையே ஆண்டாளும் பாடியுள்ளார். மேலும் சில பாசுரங்கள்:
சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம்
–3-10-6- (பெரியாழ்வார் திருமொழி)
சிற்றவை தன் சொல் கொண்ட
சீராமா தாலேலோ! பெருமாள் திருமொழி 8-6 (குலசேகராழ்வார்)
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!
பெருமாள் திருமொழி 8-6 (குலசேகராழ்வார்)