வேதத்தில் நிறைய கதைகள் உண்டு. அந்தக் கதைகள் நடப்பதற்கு முன் அந்த வேதபாகம் எப்படியிருக்க முடியும் என்ற பொதுவான கேள்வி உண்டு. இதற்கு மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தில் பதிலளித்துள்ளார்கள்.
சில சம்பவங்களெல்லாம் ஒவ்வொரு கல்பத்திலும் நடக்கும். எப்படியென்றால் ஒவ்வொரு கல்பத்திலும் ப்ரளயம், மீண்டும் கல்பம் ஆரம்பம் அதில் மீண்டும் வேதாரம்பம் என்று இருக்கும். அந்த மாதிரி வேதத்தில் சொல்லப்பட்ட கதைகள் எல்லாமே ஒவ்வொரு கல்பமும் நடக்கும். உதாஹரணமாக இராமாவதாரம், க்ருஷ்ணாவதாரம், ந்ருஸிம்ஹ அவதாரம் என்று ஒவ்வொரு கல்பத்திலும் நடந்துகொண்டே இருக்கும்.
வேதம் போல்தான் அதன் கதைகளும் ஒவ்வொரு கல்பத்திலும் வந்துகொண்டிருக்கும். அதனால் முன் கல்பத்தில் நடந்தது பின் கல்பத்தில் சொல்லுவதாக அது ஆகலாம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.