திவ்ய ப்ரபந்தம் வ்யாக்யானம் பற்றி சில சந்தேகங்கள் 1. 4000 படி 6000 படி என்றால் என்ன? 2. எதை வைத்து இப்படி பிரித்துள்ளார்கள்? 3. இவைகளுக்குள் இருக்கும் வேறுபாடு என்ன? 4. முதலில் எதைப் படிக்கவேண்டும். ஏதேனும் வரிசை இருக்கிறதா? 5. இதன் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்? 6. இவை ஒவ்வொன்றும் திவ்யப்ரபந்தத்திற்கு வேறு வேறு விளக்கமா? அல்லது அதன் அர்த்ததின் விரிவாக்கமா?

32 அக்ஷரம் கொண்டது ஒரு க்ரந்தம் என்று பெயர். அந்த மாதிரி 4000 க்ரந்தங்களுடையது 4000படி என்றும், 6000 க்ரந்தங்களுடையது 6000படி என்றும் பெயர்.
அக்ஷர கணக்கை வைத்து உத்தேசமாகப் பிரித்துள்ளனர்.
4000 படி என்பது சுருக்கம். 6000படி என்பது சற்று விரிவாக இருக்கும்
க்ரமம் என்றில்லை. அவரவர்களுக்கு எந்த வ்யாக்யானத்தில் ஈடுபாடு இருக்கிறதோ அதைப்படிக்கலாம். நம் ஸம்ப்ரதாயத்தில் 6000படி தான் முதலில் சேவிப்பது வழக்கம்.
திவ்யப்ரபந்தத்திற்கு பலவித வ்யாக்யான புஸ்தகங்கள் பல இடத்தில் போட்டுள்ளார்கள். திருவாய்மொழிக்கு திருவாராயிரப்படி வ்யாக்யானம் ஆண்டவன் ஆஶ்ரமத்தில் வெளியிடப்பட்டிருந்தது. ஸ்ரீரங்கத்தில் ரெங்கவிலாஸ மண்டபத்தில் பெரியாச்சான் பிள்ளை வ்யாக்யானமும் கிடைக்கிறது. 4000 த்திற்கும் உத்தமூர் ஸ்வாமியினுடைய வ்யாக்யானம் இருக்கிறது. இவ்வொவ்வொன்றிக்கும் இடத்தைப் பொருத்து சின்னச்சின்ன வித்யாசம் இருக்கலாம் இல்லாமலும் போலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top