க்ருஷ்ணாவதாரத்தில் குழந்தையாக இருந்த கண்ணனே திருமலையிலே திருவேங்கடமுடையானாக வந்திருக்கிறான் என்று சொல்வதுண்டு. அந்தக் கண்ணனுக்கு பாலாஜி என்று பெயர். வடக்கில் பாலா என்றால் சின்னக்குழந்தை என்று அர்த்தம். ஜி என்பது மரியாதைக்கான சொல். இரண்டையும் சேர்த்து க்ருஷ்ணாவதாரத்தில் கண்ணனை பாலாஜி என்று அழைத்தார்கள். அந்தக் கண்ணனே திருவேங்கடவனாக வந்திருக்கிறான் என்பதை “கண்ணன் அடியினை நமக்குக் காட்டும் வெற்பு” என்று ஸ்வாமி தேஶிகனும் அனுசந்தானம் பண்ணியிருக்கிறார்.
மேலும், க்ருஷ்ணாவதாரத்திற்கும் திருவேங்கடமுடையானுக்கும் உள்ள சம்பந்தம் பற்றி வேங்கடாசல மஹாத்ம்யம் கதையிலும் ஸ்பஷ்டமாக இருக்கிறது. அதில் அந்த யசோதையே மீண்டும் அவதாரம் பண்ணினார் என்றெல்லாம் வரும். ஆகையால்தான் அந்தத் திருநாமம்.
இவர் முருகன், சக்தி என்று சொல்வதற்க்கெல்லாம் ப்ரஸக்தியே இல்லை. வேறு யாருக்கும் பாலாஜி என்ற பெயர் கிடையாது.