பெருமாளிடம் பக்தி பாவத்தோடு இருப்பதினால் கண்ணில் ஜலம் வந்தால் அதுவும் பக்தியின் ஒரு ஸமர்ப்பணம் என்றே சொல்லியிருக்கிறது. “ஸ்வர நேத்ராங்க விக்ரியா” பேசும்போது குரல் தழுதழுத்தல், ஸ்தோத்ரம் சொல்லும்போது குரல் தழுதழுத்துச் சொல்ல முடியாமல் போவது. கண்களில் கண்ணீர் வருவது என்பதெல்லாம் பகவத் பக்தியினால் வருபவை. இவையெல்லாம் தோஷம் கிடையாது. இதற்கெல்லாம் பயந்து கொண்டு சொல்வதை நிறுத்திக் கொள்ளவேண்டாம். அந்த பாவத்தோடு தொடர்ந்து சேவிப்பது பெருமாளுக்கும் திருவுள்ளம் உக்கக்கும். அதைப்பற்றி ஸ்வாமி தேஶிகனே “பிப்ரதோ பாஷ்பபிந்தூந்” முதலான ரீதியில் சொல்லியிருக்கிறார்.