1. நாலாயிர திவ்ய ப்ரபந்தம் தாராளமாகச் சேவிக்கலாம். யாரிடமாவது திவ்ய ப்ரபந்தம் சந்தை சொல்லிக் கொள்ளவேண்டும். நம் GSPKவிலே இரண்டு வகுப்புகளாக திவ்ய ப்ரப்ந்தம் சந்தை முறையாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். மேலும் விவரங்களுக்குக் கீழேயுள்ள Telegram groupல் சேரவும்.
https://t.me/gspkstotras
2. பகவத் இராமானுஜரின் வேதாந்த ஸங்க்ரஹம் ஆரம்பப் பாடம் படிப்பவர்களுகென்று இல்லை. அதிலும் கடினமான விஷயங்கள் இருக்கின்றன. ஆகையால் அது எல்லாருக்கும் ஏற்றதானது. முறையாக ஸ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ள குருமுகமாகக் காலக்ஷேபம் செய்யவேண்டும். அதற்கு முன் அடிப்படையான ஸம்ஸ்க்ருத ஞானம், வ்யாகரணம், காவ்யங்காள் முதலானவைகள் வாசித்திருக்க வேண்டும். அதன் பின்னர் ஸ்ரீ பாஷ்யத்தை ஆசார்யன் மூலமாகக் கேட்கவேண்டும்.
3. ஸ்ரீவைஷ்ணவம் பற்றி நிறைய க்ரந்தங்கள் இருக்கிறது. வேதாந்த தேஶிகன், ஸ்ரீவைஷ்ணவ நெறிகள் என்று புத்தகம் அருளியுள்ளார். அதில் ஸ்ரீவைஷ்ணவம் பற்றி நிறைய இருக்கிறது. அப்புத்தகம் எல்லாவிடங்களிலும் கிடைக்கும். அதிகரண ஸாராவளி என்பது பகவத் இராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம், வேதாந்த ஶாஸ்த்ரத்தின் சுருக்கமாக ஶ்லோக வடிவில் இருக்கும். அதைப் புத்தகம் பார்த்து தெரிந்துகொள்ள முடியாது. காலக்ஷேபமாக கேட்டல் வேண்டும்.

