Q1. சேவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் ஸம்ப்ரதாயத்தில் சேவிப்பதற்கு நிறைய க்ரந்தங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் சேவிக்கலாம். எதனால் இந்தக் கேள்வி வருகிறது என்று தெரியவில்லை?
Q2. ஸ்வாமி தேஶிகன் சுலபமாக சாதிக்கிறார், என்னுடைய ஶரீரம் என்னுடைய கை, என்னுடைய கால் என்றெல்லாம் சொல்வதாலேயே ஶரீரம் வேறு நான் வேறு என்று தெரிகிறது. குறிப்பாக உறக்கத்தில் ஶரீரத்தைப் பற்றிய சிந்தனையில்லை ஆனால் ஆத்மாவைப் பற்றியதான சிந்தனை உண்டு. அந்த மாதிரி ரீதியில் புரிந்துகொள்ளலாம்.
அந்தச் சிந்தனையுடன் அனைத்து காரியங்களையும் ஆற்றுவது எவ்வாறு என்றால், மொத்தத்தையும் அப்படியே வைத்துக் கொண்டு அப்படியே செய்ய முடியாது. ஏன்னெறால் ஶரீரத்தோடு இருந்தால்தான் நாம் எதுவுமே செய்ய முடியும். ஶரீரம் இல்லாமல் நாம் எதுவுமே செய்ய முடியாது. அதனால் நாம் அந்த ஒரு ப்ரமத்தை தவிர்த்தால் போதும். நானும் ஶரீரமும் வேறு என்கிற ஒரு எண்ணத்தை நாம் வைத்துக்கொண்டால் போதும். அந்த ப்ரமத்தினாலே வரக்கூடிய தோஷங்களை எல்லாம் நாம் களைந்தால் போதும்.
அதையும் ஸ்வாமி தேஶிகன் சொல்லி இருக்கின்றார். உதாரணமாக யாராவது ஶரீரத்தைப் பற்றி தூஷணம் பண்ணினாலோ, கருப்பாக இருக்கின்றார் என்று சொன்னாலோ அதெல்லாம் ஆத்மாவில ஒட்டாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் அவர்கள் மேல் நான் கோபித்துக் கொள்ளாமல் இருக்கலாம், என்பது போல்.
Q3. இதற்காகத்தான் ஸ்வாமி தேஶிகன் சங்கல்ப சூர்யோதயம் என்கின்ற நாடகத்தைச் சாதித்திருக்கிறார். அதில் நல்ல ஞானம், வைராக்கியம், விஷ்ணு பக்தி, முதலான குணங்களை எல்லாம் வளர்த்துக் கொள்வதன் மூலம் மோசமான குணங்களை எல்லாம் குறைக்கலாம் என்றும். மேலும், பகவத் சந்நிதானம், பாகவதர்களுடன் நெருங்கிய தொடர்பு, காலக்ஷேபங்கள், இவை எல்லாம் முக்கியம் என்றும் சாதிக்கிறார். கோபம் வரும் பொழுது தேஶிகன் சாதிக்கிறார், கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் யார் மேல் கோபம் வருகிறன்தோ, அதற்கு உண்மையில் அவர்கள் நேர் காரணம் இல்லை. நாம்தான் காரணம். அவர்கள் மறைமுகக் காரணம் என்பது தெரியும். அதேபோல் பொறாமை என்று வரும் பொழுதும் நம்மிடம் இருக்கும் தோஷத்தை நாம் மறக்கும் பொழுது தான் பொறாமை வரும். நம்மிடம் இருக்கும் தோஷத்தை நாம் யோசித்துப் பார்த்தால் வராது.