பொதுவாக உபநிஷத் பாராயணம் சூர்யாஸ்தமனத்திற்குப் பின் செய்வதில்லை. திருவாய்மொழி என்பது உபநிஷத்தின் ஸாரம் என்கிறோம், ஆனால் உபநிஷத் பாராயணம் போல் திருவாய்மொழி பாராயணத்திற்கு ஏன் அந்தக் கட்டுப்பாடு இல்லை?

உபநிஷத் பாராயணம் இராத்திரியில் செய்வதில்லை. உபநிஷத்தின் ஸாரமான திருவாய்மொழியை இராத்திரியில் சொல்லலாமா என்றால் பெரியவர்களின் ஆசாரத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதாவது இரவில் தயிர் சாப்பிடக்கூடாது என்றிருக்கிறது, ஆனால் தயிரின் ஸாரமான நெய்யைச் சாப்பிடுகிறோம் அல்லவா! அதுபோலேதான் இதுவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top