த்யாகராஜ ஸ்வாமி அவசியம் ஸ்ரீராம பக்தர் தான். இந்த இடத்தில் சிவனிடத்தில் மோக்ஷம் கேட்கிறார் என்று நினைக்க வேண்டாம். “வீணா கான லோலுடௌ சிவ மனோ” என்ற சரணத்தில் வரும் சிவன் என்ற திருநாமம், இராமனை, ஸ்ரீமந் நாராயணனைதான் குறிக்கும் என்று புரிந்துகொள்ளலாம். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலே “சிவ” என்ற திருநாமம் உண்டு, அதாவது மங்களத்தை அளிக்கக்கூடியவர் என்பதாகும். மேலும் எம்பெருமானின் ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தன் தலையில் தரித்ததனால் அவருக்கு மங்களம் ஏற்பட்டு பிக்ஷாடனன் என்ற பெயர் மாறி சிவன் என்ற பெயர் ரூடியாக வந்துவிட்டது.
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலே “சிவ” என்ற திருநாமம் வருகின்றபடியால் இங்கே இந்தப் பெயர் இராமனையே குறிக்கும் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.