ஆண்டாளின் திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தன்றுதான் நடந்ததாகப் பெரியோர்கள் சொல்லுவார்கள். ஆனாலும் நாம் போகியென்று ஏன் திருக்கல்யாண மஹோத்ஸவம் கொண்டாடுகின்றோம் என்றால், திருப்பாவையின் பூர்த்தி என்பது மங்களகரமான முடிவு, அதாவது “எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்” என்று ஆண்டாள் பாடினார். அவள் பெற்ற திருவருள் எம்பெருமானுடன் திருக்கல்யாணம் புரிந்தது. அந்தத் திருவருளை நாம் அனுபவிக்கும்படியாக திருப்பாவையின் பலஶ்ருதியாக ஆண்டாள் திருக்கல்யாணம் போகியன்று நடக்கிறது.