திருவள்ளூர் எம்பெருமான் மேல் பாடிய ஸ்ரீ கிங்க்ருஹேஶஸ்துதி இயற்றியது ஸ்வாமி தேஶிகன் என்று கேள்விப்பட்டேன். இது சரியா? இந்த ஸ்துதி தேஶிக ஸ்தோத்ரமாலாவில் இல்லாததால் இந்தச் சந்தேகம். அடியேன்

திருவள்ளூர் எம்பெருமான் மேல் பாடிய ஸ்ரீ கிங்க்ருஹேஶஸ்துதி இயற்றியது ஸ்வாமி தேஶிகன் என்று சில மஹான்கள் சொல்லுகிறார்கள். இந்த ஸ்துதி ஸ்ரீ தேஶிக ஸ்தோத்ரமாலா மட்டுமல்ல, தேஶிக வைபவத்தில் எந்த ஒரு தேஶிக க்ரந்தத்திலும் இல்லை.
ஸ்ரீ கிங்க்ருஹேஶஸ்துதி அனைவரும் அனுசந்தானம் பண்ணலாம்.
குறிப்புகள்:
ஸ்வாமி தேஶிகன் அருளிச்செய்த எத்தனையோ க்ரந்தங்கள் நமக்கு கிடைக்காமல் இருக்கிறது, மேலும் நம் சிற்றறிவுக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது, எத்தனையோ விஷயங்களில் சந்தேகங்கள் இருக்கிறது அப்படி இது சந்தேகமாக இருப்பதில் தவறில்லை. சந்தேகமாகவே இருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top