கார்ய வைகுண்டம் என்பது ஸ்ரீவைகுண்டம் போலவே ஒரு கார்யத்திற்காக அப்படியொரு இடத்தை எம்பெருமான் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அது லீலா விபூதியில் இருக்கிறது, நித்ய விபூதியில் அல்ல. சில விசேஷ சக்தியுடைய தேவர்களோ, பக்தர்களோ அங்குப்போய் எம்பெருமானைச் சேவிக்கும்படியான அனுக்ரஹத்தைக் கிடைப்பத்தற்காக ஏற்படுத்தி வைத்திருக்கிறான்.
குறிப்புகள்:
இதை எவ்வாறு புரிந்துகொள்வதென்றால், திருமலையில் திருவேங்கடமுடையான் சேவைசாதிக்கிறான். ஆனால் அவரைப் போலவே பல ஊர்களில் TTD மூலமாக ஏற்படுத்தப்பட்ட திருக்கோயில்களில் அவன் சேவைசாதிக்கிறான். இவையெல்லாம் TTD Office என்பதில் சேவைசாதிக்கும் திருவேங்கடமுடையானாவான். ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் எம்பெருமான் திருமலையில் எழுந்தருளியிருப்பவர் போல், அதே கார்யவைகுண்டத்தில் இருக்கும் எம்பெருமானோ TTD கார்யாலயத்தில் சேவைசாதிக்கும் திருவேங்கடவன் போலேயாகும்.
இக்கார்ய வைகுண்டம் என்பது ஸ்ரீவைகுண்டம் போலவே ஒரு ப்ரதிபிம்பமாகும், அங்கு இருப்பது போலேயே எம்பெருமான் அமைத்துக்காட்டுவார். ஆனால் அது ஶுத்தஸத்வ மயமானதல்ல, த்ரிகுணாத்மகமானது, ப்ரக்ருதி மண்டலத்தைச் சேர்ந்ததுதான். மும்மூக்ஷூக்கள் கார்ய வைகுண்டத்திற்குச் செல்லவேண்டும் என்ற ஆசை படமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் மோக்ஷத்தில் ஆசை கொண்டவர்கள். மோக்ஷம் என்பது ஸ்ரீ வைகுண்ட ப்ராப்திதான்.ஆகையால் கார்யவைகுண்டத்தில் அவர்களுக்குக் கார்யமில்லை.
யாரால் ஸ்ரீவைகுண்டம் போகயிலவில்லையோ அவர்கள் போவார்கள். லீலா நிமித்தமாக யாராவது அங்கு வந்து கைங்கர்யம் பண்ணும்படியாக இருந்தால் அவர்கள் அங்கு பண்ணுவார்கள்.