ஶ்வேத தீபம் என்பது திருபாற்கடல் அதாவது க்ஷீராப்தியின் நடுவே இருக்கின்றது. இங்கே இருக்கின்றவர்கள் அனைவருமே ஸ்ரீ வைஷ்ணவர்கள், எப்போதும் எம்பெருமானையே சேவித்துக்கொண்டிருப்பவர்கள் அப்படிப்பட்ட அத்புதமான தீபம். அந்த ஶ்லோகத்தின் அர்த்தவிசேஷம் என்னவென்றால், ஸ்ரீரங்கத்தை ஶ்வேத தீபம் என்று ஸ்வாமி தேஶிகன் குறிப்பிட்டிருப்பார். அதாவது நான்கு பக்கமும் காவேரி, நடுவே ஸ்ரீரங்கம் என்ற தீபம், திருப்பாற்கடலில் இருப்பது போலே சயனத்திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். மேலும் இங்கே நிறைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் வசித்து வருகின்றபடியாலும் ஸ்ரீரங்கம் ஶ்வேத தீபம் போல் இருக்கிறது என்று வர்ணிக்கிறார்.