18 புராணங்களில் 6 மட்டும் ஸாத்வீக புராணம் என்பதைப் புராணமே சொல்லுகிறது. மற்ற புராணங்களை ஏன் மறையச் செய்யவில்லை என்றால், ஜனங்கள் பலருக்கு பலவிதமான் ருசியிருக்கும், அவரவருக்கு எது பிடித்ததோ அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்பதால். மேலும் ஒன்று பெருமாளைச் சேவிக்கட்டும் இல்லாவிட்டால் நாஸ்தீகனாக போகட்டும் என்று எம்பெருமான் அவர்களை விடாமல், எந்தத் தெய்வத்தை பிடித்திருக்கிறதோ அந்தத் தெய்வத்தைச் சேவித்து அவர்கள் தரும் பலனை அனுபவிக்கவும், அதாவது வேதத்திலேயே அனேக தெய்வங்கள் பற்றியும் பல யாகங்கள் பற்றியும் சொல்லியிருக்கிறது. மேலும் அனைவரும் பர தத்துவத்தைப் பற்றி உணர்வார்கள் என்று சொல்லமுடியாத காரணத்தினாலும், அவர்கள் நாஸ்தீகர்களாகப் போய்விடாமல் இருக்கவும், அவர்கள் பிற்காலத்தில் பர தத்துவத்தை உணரும்படி மாறாலம் என்பதாலும், அவர்களின் ஆஸ்தீக எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பல தெய்வங்களை நம் ஸம்ப்ரதாயத்தில், ஶாஸ்த்ரங்களில் எம்பெருமான் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்.