ஏன் திருவாறாயிரப் படி ப்ரதானமாக வடகலையார் ஸம்ப்ரதாயத்திற்கு இருக்கிறது. ஸ்வாமி தேஶிகன் ஏனைய வ்யாக்யானத்தை அவரின் க்ரந்தங்களில் குறிப்பிட்டுள்ளாரா?

திருவாறாயிரப்படி என்பது பகவத் இராமானுஜர், பிள்ளானைக் கொண்டு சாதித்த க்ரந்தம். அந்தப் பிள்ளான் பரம்பரை என்பது வடகலையார் பரம்பரை. காலக்ஷேபத்தில் பார்த்தால் பிள்ளான் சிஷ்யர் என்பவர் எங்களாழ்வான், நடாதூர் அம்மாள் என்று வரும். தென்னாசார் ஸம்ப்ரதாயத்தில் பிள்ளான் பரம்பரை வராது, அவர்களுக்கு எம்பார், பட்டர் பரம்பரை, முதலியாண்டான் பரம்பரை என்று அவர்களிடம் இருக்கு.
அந்தத் திருவாறாயிரப்படிக்கு ஒரேயொரு ஓலைதான் இருந்தது (பிள்ளான் எழுதியது). அதை பகவத் இராமானுஜர் அவரிடமே கொடுத்துவிட்டு சிம்மாசனாதிபதியாக நியமித்திருக்கிறார். ஆகையால் அந்தப் பரம்பரையில் வந்த ஸ்வாமிதேஶிகனுக்கு அது ப்ராப்தமாகியிருக்கிறது. அதே சமயம் ஒரேயொரு ஓலை மட்டுமே இருந்தபடியாலும் அது தென்னாசார் ஸம்ப்ரதாயத்தாருக்குக் கிட்டாதபடியாலும் 9000 படி போன்றவற்றைப் பண்ணவேண்டி வந்தது.
ஸ்வாமிதேஶிகன் 9000படி, 24000படி ஆகியவற்றை விசேஷமாக நிர்தேசம் பண்ணியதாகத் தெரியவில்லை. அவர் சாதித்த நிகமபரிமளம் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் வேறு சில இடங்களில் திருமாலை வ்யாக்யானம் போன்றவற்றில் பெரியவாச்சான் பிள்ளை இப்படிச் சாதித்திருக்கிறார் என்று அவரின் வ்யாக்யானத்தை எடுத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top