அடியேன் ஸ்வாமி வரப்போகும் சூரிய க்ரஹணம் பற்றிய சந்தேகம், மாலை 5 மணியளவில் ஸ்பர்ஸம் என்றும் அன்றைய தினம் போஜனம் இல்லை என்றும் பஞ்சாங்கத்தில் இருக்கிறது. அப்படியென்றால் 25ஆம் தேதி அன்றைய நாள் முழுவதும் போஜனம் உட்கொள்ளக் கூடாதா அல்லது காலையில் போஜனம் செய்து பின்னர் மறுநாள் சூர்யோதயத்திற்குப் பின் போஜனம் செய்ய வேண்டுமோ. விளக்கப்ரார்த்திக்கிறேன்.

சூர்ய க்ரஹணத்திற்கு, க்ரஹணம் பிடிக்கின்ற ஜாமத்தைத் த்விர்த்துவிட்டு முன் நான்கு ஜாமம் சாப்பிடக்கூடாதென்று இருக்கிறது. இந்த க்ரஹணம் பிடிப்பது பகல் நான்காவது ஜாமம், ஆக முன்னாடி நான்கு ஜாமம் என்பது முதல் நாள் இரவு மூன்று மணிக்குப்பின் சாப்பிடக்கூடாது. க்ரஹணம் விட்ட பின்னர் சூர்யனை பார்த்துவிட்டுதான் சாப்பிட வேண்டும்.
இந்த முறை க்ரஹணகாலம் சாயங்காலமானபடியால், க்ரஹணகாலத்திலேயே சூர்யன் அஸ்தமனமாகுகிறது. க்ரஹணம் விட்டு சூர்யனைப் பார்க்க முடியாது, மேலும் சூர்யனைப் பார்த்துவிட்டுதான் சாப்பிடவேண்டும் என்றபடியால் மறுநாள் காலைதான் சாப்பிடவேண்டும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஶாஸ்த்ரப்படி அன்றையதினம் முழுவதும் சாப்பிடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top