பிற மதங்களிலே பல விஷயங்களெல்லாம் சொல்லுவார்கள், அதெல்லாம் நல்ல விஷயங்களாக இருக்கும். ஆனால் அதே மாதிரி பெருமாளுக்கு ஏற்றார் போல் நல்ல விஷயங்கள் நம் மதத்தில் இருக்கிறபடியாலே இராமாயணம், மஹாபாரதம், ஶ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம் போன்றவற்றைச் சேவித்து தெரிந்து கொள்ளலாம்.
நாம் இதர ஸம்ப்ரதாய தர்மங்களையோ அவர்களையோ பழிக்காமல் இருத்தல் வேண்டும். “தர்மஸ்ய ப்ரபு: அச்யுத:” என்று சொல்லப்பட்டிருக்கிறது. பகவானிடம் ஈடுபட்டிருப்பதுதான் பெரிய தர்மம், எதுவாக இருந்தாலும் ஶ்ரீமன் நாராயணாயிதி ஸமர்ப்பயாமி என்று சொல்லுவதுதான் பெரிய தர்மம். பகவானுக்கு சேஷனாக இருந்துகொண்டு தர்மம் பண்ணுவது விசேஷமானது. அது இல்லாத போது அந்த தர்மத்தில் ஒரு குறைவிருக்கும் என்கிறது மஹாபாரதம். அவர்களை நாம் நிந்திக்கவோ சண்டையிடவோ வேண்டாம். அவர்கள் ரீதியில் அவர்கள் நம் ஶ்ரீவைஷ்ணவ ரீதியில் நாம் என்று இராமாயண, மஹாபாரத, மனுஸ்ம்ருதி, புராணங்கள் மற்றும் ஸ்ம்ருதிகள் சொன்ன ரீதியில் நம் ஶ்ரீவைஷ்ணவ தர்மத்தைச் செய்யலாம்.

