a மஹாளய பக்ஷ தர்ப்பணம் செவ்வாய் மற்றும் வெள்ளியில் பண்ணக்கூடாது என்ற‌ நியமம் உண்டா அல்லது அவரவர் முன்னோர்களின் வழக்கத்தைப் பின்பற்றலாமா? இவ்வருடம் மஹாபரணி அன்று வெள்ளிக்கிழமை. (அடியேன் திருத்தகப்பனார் செவ்வாய், வெள்ளியில் பண்ணும் வழக்கமில்லை) b. ஜன்ம நக்ஷத்திரம் பரணியாக இருந்தால், மஹாளய பக்ஷ தர்ப்பணம் மகாபாரணி அன்று செய்யலாமா ?

a.ஸக்ருன் மஹாளயம் , ஒருதடவை மற்றும் மஹாளயம் பண்ணுபவர்கள் வெள்ளிக்கிழமையில் பண்ணக்கூடாது என்று உண்டு. செவ்வாய்கிழமைக்கு இந்த நியமம் கிடையாது. அவர்கள்கூட மஹாபரணியில், வெள்ளிக்கிழமையாக இருந்தால்கூட மஹாபரணியில் அவர்கள் பண்ணலாம்.
b.ஜன்ம நக்ஷத்திரமாக இருந்தால்கூட மஹாபரணியில் பண்ணலாம். ஆனால் ஒருதடவை பண்ணுபவர்கள் அதைத்தவிர மத்யாஷ்டமி போன்ற மற்ற நாட்களில் பண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top