a. சந்திர க்ரஹண சமயத்தில் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்யலாமா ?. b. சந்திர க்ரஹண சமயத்தில் சில நக்ஷத்திரக்காரர்களுக்கு சாந்தி பரிகாரம் செய்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. பெருமாளிடம் பரந்யாசம் செய்து கொண்டவர்களும் இந்தச் சாந்தி பரிகாரங்களைச் செய்ய வேண்டுமா? எனில் எப்படிச் செய்ய வேண்டும் ? c.அடியேன் மஹாளய பக்ஷத்தில் தினமும் திலதர்ப்பணம் செய்கிறேன். (ப்ருஹஸ்பதியின் நேரமின்மை காரணமாக) காலை 7 மணிக்கு செய்கிறேன். இது சரியா அல்லது குதப காலத்தில் தான் (பிற்பகல்) செய்ய வேண்டுமா ?

a.க்ரஹண சம்யத்தில் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்யலாம்.
b.பரந்யாஸம் பண்ணிக்கொண்டவர்கள் தனியாக க்ரஹண காலத்தில் சாந்தி பரிகாரம் செய்கிற வழக்கம் கிடையாது, அந்தக் காலத்தில் அகத்துப் பெருமாள் சந்நிதியிலோ கோவில்களிலேயோ விளக்கேற்றுவார்கள். ப்ரதக்ஷிணம், ஸ்தோத்ரம் சேவிப்பது, ஜபங்கள் முதலானவைகள் செய்யலாம். மற்றபடி சங்கல்ப ரூபமாக சாந்தி பரிகாரம் செய்யவேண்டிய அவசியமில்லை.
c.மஹாளய பக்ஷத்தில் தினமும் தர்ப்பணம் செய்பவர்கள் கூட அந்தக் குதப காலத்தில் செய்வதுதான் சரியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top