பத்ரிநாத் பெருமாளுடைய படத்தை நாம் பெருமாள் அறையில் வைத்துக் கொள்ளலாம். ஸந்நிதிக்கு உள்ளேயே தேவதாந்திரங்கள் இருந்தால் அவர்கள் பக்தர்களாக அந்த இடத்தில் இருக்கிறார்கள். அங்குச் சென்று நாம் வழிபடுவது வழக்கமாக இருப்பதனால் படங்களை வைத்துக் கொள்ளலாம். உதாஹரணத்திற்கு நாச்சியார் கோவிலில் ப்ரஹ்மா இருக்கின்றார். அவரை நாம் சேவிக்கத்தான் செய்கிறோம். அதேபோல் பத்ரிநாத் சென்று சேவிக்கும் பொழுது குபேரன் இருந்தாலும் சேவிக்கின்றோம். அதனால் அந்தப் படத்தை வைத்துக் கொள்வதில் எந்தத் தோஷமும் இல்லை.

