a.காயத்ரி ஜபத்தை ஸந்த்யா வந்தன சமயத்தில் செய்கிறோம். அதைத்தவிர சில ப்ராயஶ்சித்தம் செய்யும் போது ஜபம் பண்ணலாம். மற்ற நேரங்களில் ஜபிப்பது வழக்கமில்லை. காயத்ரி மந்திரம் ஜபிக்க சங்கல்பம் உண்டு. சந்தியாவந்தனமாக இருந்தால் ப்ராத சந்தியாயாம் என்றெல்லாம் வரும். சங்கல்பங்கள் ஏதுவுமில்லாமல் ஜபிப்பதில் ப்ரஸக்தியில்லை. த்வயத்தை மற்ற சமயங்களில் ஜபிக்கலாம்.
b.நரக சதுர்தசி என்பது தீபாவாளி தினத்தன்று வரும். ஸூர்யோதயத்திற்கு முன் எண்ணெய் தேய்த்துக்கொண்டு வெந்நீரில் ஸ்நானம் பண்ணவேண்டும். அது விசேஷம் என்பதாக தர்ம ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் கங்கா ஸ்நானத்திற்குச் சமம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

