அடியேன் ஸாம வேதத்தைச் சேர்ந்தவன். நாங்கள் இப்போது ருத்ரம் மற்றும் சமகம் கற்று வருகிறோம். அடியேனுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டபடியால் அடியேன் ருத்ரம் , சமகம் கற்றுக்கொள்ளலாமா? மேலும், வேதத்தின் பிற பகுதிகளையும் கற்க முடியுமா? ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவற்றைத் தெரிந்துகொள்வதன் முக்கியத்துவம் என்ன? இதைக் கற்கும்போது நாம் எத்தகைய சிந்தனையுடன் இருக்க வேண்டும்? 

ருத்ரம், சமகம் கற்றுக்கொள்ளலாம். சிவனுக்கு அந்தர்யாமியாகப் பெருமாள் இருக்கிறார் என்ற சிந்தை பொதுவாக இருந்தால் போதுமானது. ஶ்ரீவைஷ்ணவர்கள் இதைத் தெரிந்துகொள்வதன் முக்யத்வம் என்பது இது வேத மந்த்ரத்தின் பகுதி என்பது மட்டும்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top