ஶரணாகதிக்குப் பின் திருவாராதனம் என்பது நித்ய கைங்கர்யத்தில் வருமா? நேரம் பற்றாக்குறையால் நிவேதனம், ஜபம் மற்றும் பாராயணம் மட்டுமே தினமும் செய்கிறேன். முக்யமான நாட்களில் மட்டுமே திருவாராதனம் செய்கிறேன்.

ஶரணாகதிக்கு முன்னானாலும் பின்னானாலும் சரி திருவாராதனம் தினமும் செய்யவேண்டிய கைங்கர்யம். ஆகையால் திருவாராதனம் என்பது நித்ய கைங்கர்யம் என்று ஸ்ம்ருதிகளிலும் ஆகமங்களிலும் சொல்லியிருக்கிறார்கள். எனவே முடிந்தவரை தினமும் திருவாராதனம் செய்வது நல்லது.
உங்களால் முடியாவிட்டால் உங்கள் அகத்திலிருக்கும் பெரியவர்களையோ, சிறியவர்களையோ, புத்திரன் முதலியவர்களைக் கொண்டு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top