பொதுவாக நாம் முதலில் ஸந்தியாவந்தனம் செய்துவிட்டு, அதன் பிறகே திருவாராதனம் செய்வோம். ஆனால் அல்ப த்வாதசி நாட்களில் நாம் அதிகாலையிலேயே பாரணை செய்ய வேண்டியுள்ளதால், அன்று பின்பற்ற வேண்டிய சரியான அனுஷ்டானம் பற்றி தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

அல்ப த்வாதசி நாட்களில் ஸந்தியாவந்தனம்,ப்ரம்ம யஜ்ஞம்,மாத்யாஹ்நிகம், திருவாராதனம், வைஶ்வதேவம் என எல்லாவற்றையும் முடித்துவிட்டுப் பாரணை பண்ணவேண்டும். அதில் மாத்யாஹ்நிகம் முதலியவற்றை சூர்யோதயத்திற்கு முன்னமே செய்திருந்தால் மத்யாஹ்னத்தில் மீண்டும் செய்யவேண்டும். சூர்யோதயத்திற்குப் பின்னர் மாத்யாஹ்நிகம், ப்ரம்ம யஜ்ஞம், திருவாராதனம் முதலியவைகளைச் செய்திருந்தால் மீண்டும் செய்யத்தேவையில்லை.
இதைப் பற்றி விரிவாக ஶ்ரீமதழகியசிங்கர் ஆஹ்நிக க்ரந்தத்தில் ஸாதித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top