பொருளாதார நெருக்கடியால் என் குடும்பம் கடந்த தலைமுறையில் ஸம்ப்ரதாயத்திலிருந்து சற்று விலகி இருந்தது. எனக்கும் முறைப்படி உபநயனம் தாமதமாகவே நடந்தது. இப்போது நேபாளத்திலிருந்து ஒரு பயணி மூலம் எனக்கு சாளக்கிராமம் கிடைத்தது. ஆனால் எனக்கு வேததாத்யயனம் ஆகவில்லை, பிரபந்தங்கள் முழுமையாகத் தெரியாது. தற்போது ‘நீராட்டம்’ மற்றும் ‘த்வயம்’ மட்டும் கூறி திருவாராதனம் செய்கிறேன். மார்கழி மாதத்தில் இரண்டு முறை அமுது செய்ய வேண்டும் என்று கேள்விப்படுகிறேன். வேதாத்யயனம் ஆகாதவர்கள் திருவாராதனம் செய்ய முறையான வழி எது? ஸம்ப்ரதாயத்தை இன்னும் ஆழமாக எப்படிக் கற்றுக் கொள்வது?

வேதாத்யயனம் செய்யவில்லை என்றால், ஒரு பெரியவரிடம் ஆஹ்நிக காலக்ஷேபம் செய்து திருவாராதன முறையைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top