1) துளஸீ இலைகள் காய்ந்து போனாலும் திருவாராதனத்திற்குப் பயன்படுத்தலாம், என்று உபன்யாசங்களில் கேட்டிருக்கிறேன். அதே போல், நம் வீட்டில் வளரும் துளஸீச் செடிகளில் இருந்து சற்றே மஞ்சள் ஆன இலைகளைத் திருவாராதனத்திற்குப் பயன்படுத்தலாமா? 2) ஆண் பிள்ளைகள் மற்றும் பேரன்களே இல்லாதவர்களின் இறுதி காரியங்களையும் மற்ற சடங்குகளையும் யார் செய்யலாம்? 3) ஆரண்ய காண்டத்தில் (3.48.8) ராவணன் சீதாப்பிராட்டியிடம், “”எனக்குப் பயந்தே சூரியன் தன் கடமைகளைச் செய்கிறான்”” என்று கூறுகிறான். அப்படிபட்ட சூரியனை, சர்வேஸ்வரனான ஸ்ரீ ராமபிரான் ஆதித்ய ஹ்ருதயத்தால் துதித்து, அதே ராவணனை அழித்தார் என்று யுத்த காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு நம் ஆசார்யர்கள் ஏதேனும் விளக்கம் அளித்துள்ளார்களா?

காய்ந்த துளஸீ இலையைப் பெருமாளுக்கு உபயோகிக்கலாம். ஆனால் செடியிலிருந்து காய்ந்த/பழுப்பு நிற துளஸீயை எடுத்துச் சேர்ப்பிக்கக்கூடாது.
கணவன்–மனைவி பரஸ்பரம் செய்யலாம். அதற்கு பிறகு நெருங்கிய உறவினர், சகோதரர் முதலியவர்கள் செய்யலாம்.
இதற்கு யார் யார் கர்தா என்ற க்ரமம் இருக்கிறது. ப்ராசீன ஆசார ஸங்க்ரஹம் முதலான் தீட்டு விவரங்களைச் சொல்லும் புத்தகங்களில் இவரில்லை என்றால் இவர் என்று க்ரமம் கொடுக்கப்பட்டிருக்கும். ஸ்த்ரீகள் இருந்தால் அவர்களின் கைப்புல் வாங்கி செய்யவேண்டும்.
ஆதித்யனுக்கு சக்தி ஒன்னும் இராவணன் கொடுத்து வரவில்லை, பெருமாள் கொடுத்ததுதான், எம்பெருமான் அந்தச் சக்தியை வைத்தே அவனை அழிக்கிறார், குரங்குகள் வைத்து ராக்ஷஸப் படையை அழித்தது போலே.
குறிப்புகள்:
பெருமாள் திருவவதாரத்தில் ஆதித்ய ஹ்ருதயத்தால் சூர்யனை ஸ்தோத்ரம் செய்தார் என்றால், அதில் தான் அந்தர்யாமியாக இருக்கக்கூடிய நாராயணனை ஸ்தோத்ரம் செய்தார் என்றர்த்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top