ப்ரபந்தம் மற்றும் வேதங்களை விடியற்காலையில்தான் கற்றுக்கொள்ளவேண்டும். அப்படியிருக்க குளித்துவிட்டுதான் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிர்பந்தமில்லை. தூக்கம் நன்றாகப் போக பல் தேய்த்து விட்டு, . கை, கால் அலம்பி சொல்லிக்கொள்ளலாம். அந்தக் காலத்தில் பிம்மாலைப்பொழுதில்தான் சொல்லிக்கொடுப்பார்கள். இரவு வேளையில் என்று கேட்டால் கற்றுக்கொள்வதற்கு மடி நியமமில்லை. ஒரளவு பார்க்கமுடிந்தால் பார்ப்பது நல்லது. சுத்தமாக இருந்து கற்றுக்கொள்வதே முக்கியம்.