நம் பாரதீயமான ஜ்யோதிஷ ஶாஸ்த்ரத்தில் நாம் நம்புவது பூமி நிலையானது , சூர்யன்தான் சுற்றுகிறது. அயனம் என்றால் மார்கம். சூர்யன் வடக்கு நோக்கி நகரும்போது உத்தராயனம் என்றும், தெற்கு நோக்கி போகும்போது தக்ஷிணாயனம் என்றும் சொல்வார்கள். இக்காலங்கள் இரண்டும் புண்யகாலங்கள், அந்தப் புண்யகாலங்களில் தர்ப்பணம், திருவாராதனம் அவசியம் பண்ணவேண்டும். ஆகமங்களில் அவசியம் சொல்லப்பட்டிருக்கும். ஆழ்வார், ஆசார்யகள் ஸ்ரீஸூக்திகளில் இது பற்றி இருப்பதாகத் தெரியவில்லை. இருக்குமாயின் தெரிவிக்கிறோம்.