பகவத் கீதையில் பல்வேறு வேதாந்த ஞானங்கள், ஶரணாகதி பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறது. ஆகையால் பகவத் கீதை அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.மோக்ஷத்திற்கு வழி கொடுக்குமா என்றால், இந்த ஞானம் பெற்றபிறகு பகவான் நமக்கு ஶரணாகதி செய்யவேண்டும் என்கிற புத்திகொடுத்து, ஆசார்யரிடம் ஶரணாகதி செய்வித்து பின் மோக்ஷம்கிடைக்கும். ஶரணாகதி செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றவைப்பதினால் இது ஒருவிதமான முக்திக்கு வழிகொடுக்கும்.