சாதாரணமாக ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு பெருமாள் விஷயமாக எந்த ஸ்தோத்ரதைச் சொன்னாலுமே இந்தத் திசைகளெல்லாம் மாறித்தரும் அதன் வீர்யங்களெல்லாம் குறையும். வேண்டுமென்றால், அபாமார்ஜந ஸ்தோத்ரம் என்பதை சனி திசையின்போது பெரியவர்கள் சேவிக்கச் சொல்வார்கள். தசாவதார ஸ்தோத்ரம் என்பது எல்லா க்ரஹங்களுக்கும் உள்ள ஸ்தோத்ரம். ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு க்ரஹத்திற்கு அதிபதியான நாராயணனைச் சொல்வதாகும். குறிப்பாக சனி திசைக்கு தசாவதார ஸ்தோத்ரத்தில் இருக்கும் கூர்மாவதார ஶ்லோகத்தைப் பல ஆவ்ருத்தி சொல்லலாம்.