கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சில சமூக வலைதளங்களில் சமீப காலமாக பரவி வருகிறது.ஸ்வாமி, இதற்கு ஸமாதானம் அருள பிரார்த்திக்கிறேன். தவறான விஷயமெனில் எப்படி கண்டிப்பது? அல்லது யாரோ விஷயம் தெரியாதவர் ஏதோ சொல்கிறார் என்று விட்டு விலகி (ignore) இருக்க வேண்டுமா? சமூக வலைதளங்களில் வந்துள்ள விஷயம்: விஷ்ணுவின் ஒரு அவதாரமாகவும் 26ஆவது மகாயுகத்தில் வாழ்ந்தவரும் ஆன ராமரும் விபூதியை அணிந்தவர் தான்.அதற்கு ஆதாரமாக – “ராமம்…பஸ்மோத் தூளித சர்வாங்கம் ” -ராம ரஹஸ்ய உபநிஷத் கூறுகிறது. இதன் பொருள்,”இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார் ” என்பதாகும். மேலும், “க்ருதாபிஷகஸ் ஸரராஜராமஸ் ஸீதாத்விதீயஸ் ஸஹலக்ஷ்மணேந க்ருதாபிஷேகஸ்த் வகராஜ புத்ர்யா ருத்ரஸ்ஸ விஷ்ணுர் பகவாநி வேச : “ என்று கூறுகிறது வால்மீகி ராமாயணம். இந்த ஶ்லோகத்தின் பொருள் : “பகவானும் ஈஸ்வருமான ருத்திரர் பார்வதியாரோடு ஸ்நாநம் பண்ணி விஷ்ணு தேவருடன் விளங்கினதுபோல, இராமர் சீதையோடு கோதாவரியில் மூழ்கி இலக்குமணருடன் விளங்கினார்” இராமர் நீராடியபின் நீறும் பூசியிருந்தால் தான் சிவன் போல் விளங்கியிருப்பார்,ஆதலால்,இராமர் திரு நீற்றைச் சின்னமாக தரித்த சிவ பக்தர் என்பது உண்மையே. அதர்வண வேதத்திலுள்ள பஸ்மஜாபால உபநிஷத், “பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷா பரணா :தக்ஷிணாயாந் திகி விஷ்ணு “ என்று கூறுகிறது. “திருமால் ஸ்ரீ காசி ஷேத்திரத்திலே தென்திசைக்கணிருந்து ,விபூதி ருத்திராக்ஷதாரணமுடியவராய் உபாசிக்கின்றனர்” என்பது பொருள். “ஸ்வர்ண வர்ண ஜடாபாரம் ஸாஷாத் ருத்ர மிவாபரணம் பஸ்மோத் தூளித ஸ்ர்வாங்கம் த்ருஷ்டுவா காம வசங்கதா “ என்று அத்தியாத்ம ராமாயணம் கூறுவதால்,ராமர் விபூதி அணிந்தார் என்பது புலனாகிறது.

தாமஸ புராணங்களில் இதுபோல் விஷயங்கள் வரும். அவை அந்தப் புராணம் படிப்பவர்களை மோகிப்பதற்கு அல்லது அவர்கள் திருப்திக்காக எழுதப்பட்டவை. நாம் படிக்கக் கூடாது. ஶ்ரீமத் இராமாயணத்தில் சிவன் போல, இந்திரன் போல என்றெல்லாம் வரும். இது ஒரு எடுத்துக் காட்டாக சிறப்பைச் சொல்ல வந்தது. மனிதர்களான நமக்கு விசேஷமாக புரிய வைப்பதற்காக இந்த எடுத்துக் காட்டு. விஷ்ணு போல இருந்தார் என்றும் குறிப்பு உண்டு.
சிவன் போல விபூதி அணிந்தார் என்று அங்குச் சொல்லவே இல்லை. விபூதி பற்றிய குறிப்புகள் பல புராண வசனங்களில் உண்டு. வேதத்திலும் இருக்கலாம். அவை சிவ பக்தர்களுக்கு வந்தவை. ஸாத்விகனுக்கு பஸ்மம் கூடாது என்று தெளிவாகச் சொல்லி இருப்பதால் நாம் அதை படிக்கக் கூடாது.
அத்யாத்ம ராமாயணமும் மொத்தமும் அப்படியே கொள்வது கூடாது. பூர்வாசார்யர் சொன்ன விஷயம் மட்டுமே ஏற்பது. மற்றவை சொல்லி இருந்தாலும் நமக்கு அல்ல
வேத புராணங்கள் பலருக்காக பலதும் சொல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top