பெருமாள் கொண்டு சென்ற கணையாழி என்பது மற்றவை போல் ஒரு ராஜா அணியும் கிரீடம், மாலை, கைவளைகள் போன்ற ராஜாபரணங்கள் கிடையாது. இது பெருமாளுக்கும் தாயாரும் விவாஹ காலத்தில் அவர்கள் இருவருக்கும் தனிப்பட்டமுறையில் பரஸ்பரம் அணிந்த ஒரு ஆபரணம் என்று கொள்வது உசிதமாக இருக்கும்.
எம்பெருமான் இராஜாவின் ஆபரணங்களை எல்லாம் துறந்து, தனக்கேன்றுள்ள விசேஷ ஆபரணத்தை மட்டும், எப்படி பவித்திரம் போன்றவைகளோ அது போல் இதை பெருமாளும் பிராட்டியும் எடுத்துக்கொண்டு போனார்கள் என்று எடுத்துக்கொள்வதுதான் உசிதம்.