ஆமாம் பானைக்குள்ளும் ஆத்மா இருக்கிறது. எல்லா வஸ்துகளுக்கு உள்ளும் ஜீவாத்மா இருக்கிறது. ஜீவாத்மா இல்லாத எந்த வஸ்துவும் இல்லை என்று ஸ்ரீபாஷ்யகாரர் சாதித்திருக்கிறார். அதன் ஞானம் என்பது மிகமிகக் குறைவாக இருக்கின்றபடியால் நமக்குத் தெரியாது. ஆகையால் எல்லா வஸ்துக்குள்ளும் ஆத்மா உண்டு அதற்கு மோக்ஷம் கொடுத்தது சரியே.